--- --:--:-- --

அரசுப்பேருந்து டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு..!

1

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஹைதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் தெலுங்கானா மாநில அரசு பேருந்து, ஜல்லி லோடு டிப்பர் லாரி ஆகியவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜல்லி லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்ததில் பாதி பேருந்து முழுவதுமாக நசுங்கி சிதைந்து விட்டது.

 

இந்த விபத்தில் சிக்கிய அரசு பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாக தெரியவந்துள்ள நிலையில் பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். மேலும் பல பயணிகள் படுகாயம் அடைந்தனர். ஒட்டுநர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த நிலையில் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டிருக்கும் பயணிகளை மீட்கும் முயற்சியில் அந்த பகுதி மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து பற்றி தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை சேவல்லாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Right Menu Icon