--- --:--:-- --

பழனியில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

4

ன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே திரளான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

 

அதேபோல் ரோப்கார், மின்இழுவை ரயில் வழியாகவும் பக்தர்கள் செல்ல குவிந்ததால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயிலில் உள்ள பொது தரிசன பாதை, கட்டண தரிசன பாதைகளில் சென்று தரிசனம் செய்ய நீண்டவரிசை காணப்பட்டது. எனவே சுமார் 2 மணி நேரம் காத்திருந்தே சன்னதிக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர்.

Right Menu Icon