விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு..!
நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என கூறப்பட்டுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ அவரின் பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோவை ‘சிங்கத்தின் முதல் கர்ஜனை’ என குறிப்பிட்டு படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
மிடுக்கான காவல்துறை அதிகாரி போன்ற தோற்றத்தில் விஜய் தோன்றும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, பான் இந்தியா ரிலீஸாக படம் வெளியாகவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபிறகு, தனது 69ஆவது படமே கடைசி படமாக இருக்கும் என விஜய் தெரிவித்திருந்தார். எனவே அவரது கடைசி படத்தை ஆரவாரமாக கொண்டாடுவதற்காக அவரின் ரசிகர்கள் காத்துள்ளார்கள்.





