கும்பமேளாவில் புனித நீராடிய விஜய்யின் தாய், தந்தை!
நடிகரும், இயக்குனருமான எஸ். ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். உத்தரப்பிரதேசத்தின், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் இருவரும் கங்காவிற்கு சிறப்புப்பூஜையும் செய்து வழிபட்டனர்.
இதுவரை மகாகும்பமேளாவில், சுமார் 55 கோடி மக்கள் புனித நீராடினர் என உ.பி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




