விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா திடீர் நிச்சயதார்த்தம்..!
ஐதராபாத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை ராஷ்மிக மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி, திருமண வாழ்விலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தகவல்கள் உலாவியது. இந்த நிலையில், இருவருக்கும் ஐதராபாத்தில் உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




