பள்ளியை குற்றம் சாட்டி அரசு பள்ளி மாணவிகள் வெளியிட்ட வீடியோ..!
மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளை துன்புறுத்துவதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தலைமையாசிரியர் கொடுமையால் பல மாணவிகள் டிசி வாங்கி சென்றதாகவும் அரசு பள்ளி மாணவிகள் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் கழிப்பறையை ஒரு மணி நேரம் மட்டுமே திறந்து வைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





