--- --:--:-- --

மரணத்திற்கு முன்பு மனைவிக்கு கணவன் டார்ச்சர் கொடுக்கும் வீடியோ

3

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கடந்த 21ஆம் தேதி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருபதாம் தேதி அவரது கணவர் அந்த பெண்ணை கட்டையால் அடித்து துன்புறுத்திய செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. புது காலனி கார்டு பகுதியை சேர்ந்தவர் குமார்.

 

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குமார் இதுவரை காதல் திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 7 மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி தூக்கு மாட்டிக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.

 

பத்து நாட்களுக்கு பிறகு செல்போன் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், விசாரணைக்கு பிறகு தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon