வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி காலமானார். வால்பாறை சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் அமுல் கந்தசாமி, எம்ஜிஆர் மன்றத்தின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
60 வயதான அவர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த இரு தினங்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமுல் கந்தசாமியின் உடல் அவரது சொந்த ஊரான அன்னூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.






