--- --:--:-- --

வைகை புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று..!

6

னது நகைச்சுவைக் காட்சி இல்லாமல் தமிழகத்தில் ஒரு நாள் விடியாது ஒரு பொழுதும் முடியாது என்ற நிலையை உருவாக்கி காமெடி ஜாம்பவானாக வலம் வரும் வடிவேலு, இன்றளவும் மீம் கிரியேட்டர்களின் முக்கிய கண்டன்ட்டாக விளங்குகிறார்.

 

தனது நகைச்சுவைக் காட்சி இல்லாமல் தமிழகத்தில் ஒரு நாள் விடியாது ஒரு பொழுதும் முடியாது என்ற நிலையை உருவாக்கி காமெடி ஜாம்பவானாக வலம் வரும் வடிவேலு, இன்றளவும் மீம் கிரியேட்டர்களின் முக்கிய கண்டன்ட்டாக விளங்குகிறார்.

 

வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளால் தான் இன்று தமிழகத்தில் உள்ள பல தனியார் நகைச்சுவை சேனல்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற சூழலில்,

 

பல சமூக வலைதள பக்கங்களில் மீம் கிரியேட்டர்களின் ஒற்றை கன்டென்ட் சோர்ஸாகவும் அவரே விளங்குகிறார்.

 

ஒரு நகைச்சுவை காட்சியில் கூட ஏதோ ஒரு பழைய பாடலை பாடி சுவாரசியத்தை கூட்டிவிடும் வடிவேலு, தமிழ் சினிமாவில் தனியே பாடிய ஒவ்வொரு பாடலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றவை.

 

வடிவேலுவின் முதல் திரைப்படமான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் குறுக்கே வடிவேலு பாடும் சின்ன பகுதிக்கே பெரிய ரசிகர் கூட்டம் இன்றளவும் உண்டு.

 

வடிவேலு குரலில் ஒலித்த எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டு கேட்கும் என்ற பாடல் தமிழ் சினிமாவில் இணையதளம் இல்லாத காலத்திலேயே வைரல் ஹிட் என்று சொல்லலாம்.

 

Right Menu Icon