--- --:--:-- --

18 வயது நிரம்பியவர்களுக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி..!

1

கொரொனா தடுப்பூசி திட்டம் 18 வயது நிரம்பிய அனைத்து குடிமக்களுக்கும் வரும் மே 1 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. கொரொனா தடுப்பூசி போடும் திட்டம் நாடெங்கும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போடும் திட்டம் நாடெங்கும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது.

 

மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து அடுத்த கட்டமாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலங்கள் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை 50 விழுக்காட்டை மத்திய அரசுக்கு தந்துவிட வேண்டும் என்றும் மீதமுள்ளவற்றை மாநில அரசுகளுக்கும் வெளிச் சந்தை விற்பனைக்கும் இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கும் வெளிச்சந்தைக்கும் இருக்கும் தடுப்பூசிகளை முன்கூட்டியே முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 

மத்திய அரசு தனக்கு கிடைக்கும் தடுப்பூசிகளை மாநிலங்களில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை தந்து இரண்டாவது தவணை ஊசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

 

மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களுக்கு தடுப்பூசி குறிப்பாக வழங்கப்படுவதாக புகார் கூறிய நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் விநியோக நடைமுறையை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

இந்த புதிய முறை மூலம் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள், தொழில் நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தி நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த இருக்கும் நிலை ஏற்படும்.

Leave a Reply

Right Menu Icon