--- --:--:-- --

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..!

2

கொரொனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காது. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கடைகள், பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் கடும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டீக்கடைகள், காய்கறி கடைகள் பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள் வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

 

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளவும் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இரவு நேர ஊரடங்கு முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon