--- --:--:-- --

தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்..!

13

மிழகத்தில் அடுத்த இரு நாட்களில் 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20, 21 தேதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் காற்றில் உள்ள ஈரப்பதம் 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிற்பகல் முதல் அடுத்த நாள் காலை வரை வெப்பம் இயல்புக்கு மாறாக அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தேவைக்கு ஏற்ப குடிநீர் இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெள்ளை மற்றும் கதர் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon