கந்துவட்டி கொடுமை..விபரீத முடிவு..!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் தேவைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாள ராஜன் என்பவரிடம் 20 ரூபாய் வட்டிக்கு 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கார்த்திகா வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் ஒன்பதாயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக கார்த்திகாவால் வட்டி செலுத்த முடியவில்லை என தெரிகிறது. இதனால் ராஜா கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கார்த்திகா தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாய், மகள் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.





