முதல் முறையாக முக கவசம் அணிந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்..!
அமெரிக்காவில் இதுவரை முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்த அதிபர் டோனல்டு டிரம்ப் முதல் முறையாக முககவசத்துடன் வெளியே வந்துள்ளார். அமெரிக்காவில் கொரொனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்த டிரம்ப்பிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காயம் அடைந்த ராணுவ வீரர்களை காண வந்த போது கரு நீல நிற முக கவசத்தை அணிந்துகொண்டு டிரம்ப் மருத்துவ மனைக்கு வந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாம் முக கவசத்திற்கு எதிரான நபர் அல்ல என்றும் முக கவசத்தை எந்த இடத்தில் எந்த சூழலில் அணிய வேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ஏற்ப முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் முக கவசம் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக அங்கு கொரொனா பாதிப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து முகக்கவசம் அணிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







