நகர்புற உள்ளாட்சி தேர்தல் : அனைத்து முடிவுகளையும் விஜய் சரியான நேரத்தில் அறிவிப்பார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை விரைவில் வெளியிடப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னோடி முனைவர் விஜய் தான் எனவும் குறிப்பிட்டிருக்கும் அவர், அனைத்து முடிவுகளையும் விஜய் சரியான நேரத்தில் அனைவருக்கும் அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.





