கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மீடியனில் இருந்த மரத்தில் மோதி விபத்து..!
செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னையை சேர்ந்த மருத்துவர் ஹேமவர்ஷன் என்பவர் தனது தாயை பாரதியுடன் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி மஹிந்திரா ரக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கோடா ராபிட் கார் ஒன்று அவர்களை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் ஓரமாக செல்ல முயன்ற மகேந்திரா கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீடியனில் ஏறி அந்த மரத்தின் மீது வேகமாக மோதியது. மரத்தில் மோதிய வேகத்தில் சாலையின் மற்றொரு புறத்தில் மகேந்திரா கார் சென்ற நிலையில் அதில் பயணித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த சமயத்தில் மருத்துவரின் கார் அந்த வழியே வந்த மாருதி ஸ்விஃப்ட் காரின் மீது லேசாக மோதியதில் அந்த காரின் முன்பகுதி சேதமடைந்தது.





