--- --:--:-- --

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அலகு தேர்வு..!

6

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அலகு தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கொரொனா காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக அலகு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வருகிற மே 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரை வாட்ஸ்அப் மூலமாக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது.

 

அதில் மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்த குழுவில் வினாத்தாள் விடைத்தாள் தவிர்த்து வேறு செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட கூடாது.

 

விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவு எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவிகள் விடைகளை எழுதி பெற்றோரிடம் கையொப்பம் பெற்று வீடியோ வடிவத்திற்கு மாற்றி ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.

 

ஆசியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் ஏற்படுத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 27ஆம் தேதி உயிரியல் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள், 29ஆம் தேதி தமிழ்மொழிப் பாட தேர்வு, ஜூன் 1ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூன் 5ஆம் தேதி வேதியியல் தேர்வும், ஏழாம் தேதி மற்ற தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon