பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறார்.
இதனை முன்னிட்டு, இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் பற்றி விவாதம் நடத்திய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.





