உதயநிதி ஒருநாளும் முதல்வராக முடியாது – அமித்ஷா
திருநெல்வேலி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார். கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இன்று மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு 3.20 மணிக்கு வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுகிறார். அங்கு பா.ஜ.க தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக பேச உள்ளார். மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் கூறப்படுகிறது.





