கோவை வடக்கு மாவட்ட பா.ம.க சார்பாக வன்னிய சமுதாய மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி இரு சக்கர வாகன பயணம் மற்றும் ஆர்ப்பாட்டம் !!!
கோவை வடக்கு மாவட்ட பா.ம.க சார்பாக இன்று வன்னிய சமுதாய மக்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கோரி இருசக்கர வாகன பேரணி மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு வழங்கல் நிகழ்ச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கராஜ் தலைமையில் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுவினை மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.முன்னதாக வன்னிய சமுதாய மக்களுக்கு அரசு துறைகளில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் கோவை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் காந்தி தலைமையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் மனுகொடுக்கப்பட்டது. எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலரிடம் புரட்சி மணி தலைமையில் மனு வழங்கப்பட்டது.பேரணியில் மாநில துணை தலைவர் மின்னல் சிராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகர தலைவர் அருண், நகர செயலாளர் ப்ளவர் ஷாஜகான், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜ்குமார், சமூக நீதி பேரவை மாநில துணைச்செயலாளர் வழக்குரைஞர் பழனிச்சாமி, மாநில மாணவரணி துணைச்செயலாளர் ராசி ஹக்கீம்,மாநில தொழிற்சங்க துணைச்செயலாளர் மேட்டுப்பாளையம் முகமது ரபி,வடக்கு மாவட்ட ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆனைகட்டி மணிகண்டன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்னி தேவன், கருப்புசாமி, கணேஷ், அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக அலங்கார் நிஜாம் நன்றியுரையாற்றினார்.







