மின்னல் தாக்கியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வலத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்களான சஞ்சய் மற்றும் சஞ்சனா தனியார் பள்ளியில் படித்து வந்தனர் பள்ளி முடிந்து அவர்களின் சித்தப்பா இளையராஜா என்பவர் மாணவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக சிங்காரப்பேட்டை என்ற இடத்தில் மூன்று பேர் மீதும் மின்னல் பாய்ந்தது. இதில் நிகழ்விடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி உயிர் இழந்தது கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





