--- --:--:-- --

சாதாரண காய்ச்சலுக்கு பலியான இரண்டு மாத குழந்தை..!

2

ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேது ராஜா. இவரின் மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டரை மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த குழந்தைக்கு காய்ச்சல் என்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.

 

வெள்ளிக்கிழமை காலை குழந்தையின் உடல்நிலை மோசமாகவே உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக குழந்தையை அழைத்து சென்றுள்ளனர்.

 

இந்த மருத்துவமனையில் மொத்தம் ஆறு பிளாக் உள்ள நிலையில் குழந்தைகள் பிரிவு எந்த ப்ளாக்கில் உள்ளது என்பது தெரியாமல் மருத்துவமனைக்குள் அடைந்துள்ளார் கஸ்தூரி.

 

ஒரு கட்டத்தில் குழந்தையின் உடல் நிலை மோசமாக செய்வதறியாது தவித்த கஸ்தூரி அங்கிருந்து அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon