போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு..!
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் போக்சோ சட்டத்தில் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார் .மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.







