70 ஆயிரம் கணக்குகளை முடக்கி உள்ள ட்விட்டர் நிறுவனம்..!
அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70,000 கணக்குகளை முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடம் வன்முறை தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
அந்த பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் வன்முறை தொடர்பான கருத்துக்களை பதிவிட்ட எழுபதாயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
வெறுப்பு உணர்வை தூண்டும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் கருத்துக்கள் வீடியோக்களை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.






