--- --:--:-- --

போலி டிக்கெட் மூலம் லியோ படம் பார்க்க முயற்சி..!

5

டலூரில் போலி டிக்கெட் மூலம் லியோ படத்தை பார்க்க முயன்றவர்களால் சலசலப்பு ஏற்பட்டது. பண்ருட்டியில் உள்ள புவனேஸ்வரி திரையரங்கில் 496 இருக்கைகள் உள்ளன.

 

அங்கு லியோ படத்தின் முதல் காட்சிக்கு விஜய் ரசிகர் மன்றங்கள் மூலமாக டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர் மன்றங்கள் கொடுத்த டிக்கெட்டில் பல போலி முத்திரையுடன் காணப்பட்டுள்ளன.

 

இருக்கைகளைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் படம் பார்க்க குவிந்தனர். அதனால் சந்தேகம் அடைந்த திரையரங்க ஊழியர்கள் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்தனர். அதில் பல போலி டிக்கெட் என்பது தெரிய வந்தது.

 

இதனால் அவர்களை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பணம் கொடுத்து தான் டிக்கெட் வாங்கியதாகவும் தங்களையும் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தினார். அதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon