செருப்பை எடுத்து வரக்கூறிய ஊராட்சி மன்ற தலைவர்..!
தஞ்சை அருகே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தனது செருப்பை எடுத்து வருமாறு விவசாயி ஒருவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை திருமலை சமத்துவம் ஊராட்சி நடைபெற்று வரும் பணியில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆய்வு செய்கிறார். ஆட்சியருடன் வட்டாட்சியர் சக்திவேல் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உடன் இருந்தனர்.
அப்பொழுது நூலகத்தில் விட்டு சென்ற தனது செருப்பை சென்று எடுத்து வருமாறு விவசாயி ஒருவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் கூறினார். நூலகத்தின் வாயிலிருந்த காலனியை ஆய்வு நடைபெற்ற பகுதி வரை கைகளில் எடுத்துச் சென்ற விவசாயி ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுத்தார்.
பின்னர் அந்த காலணியை அணிந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் ஆட்சியருடன் ஆய்வுக்கு சென்றார். ஊராட்சி மன்ற தலைவரின் இந்த செயலை அங்கிருந்த அதிகாரிகள் யாருமே கண்டு கொள்ளவில்லை.கண்டிக்கவும் இல்லை.
சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஜனநாயக நாட்டில் வாழ்வதாக கூறினாலும் எளியோரை மரியாதை குறைவாக நடத்தும் இது போன்ற செயல் தொடர தான் செய்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





