--- --:--:-- --

தொண்டி அருகே தோப்பில் தீப்பற்றி எரிந்த மரங்கள்..!

15

தொண்டி அருகே தோப்பில் தீப்பற்றி மரங்கள் எரிந்து நாசம் டிஎன்பி நிலை அலுவலர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரம் படப்புவயல் கிராமம் உள்ளது.

 

இங்கு அபுல்ஹசம் மகன் அக்பர்அலி (67) என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்து பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு நிலையை அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

 

 

Right Menu Icon