--- --:--:-- --

திருவாடானை பகுதிகளில் மரத்தில் இரை தேடும் கொக்குகள்

21

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடான தாலுகா, திருவாடானை அரசு கலைஅறிவியலட கல்லூரி நுழைவாயில் அருகே கல்லூரி வளாகத்தில் தேக்குமரம் மற்றும் பன்னீர் பூ மரம் உள்ளது. இந்த மரங்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. அதனால் அதிக அளவில் வண்டுகள், தேனீக்கள் மற்றும் பூச்சிகள் வருகிறது. இதை உணவாக உண்பதற்கு வெள்ளைநிற கொக்குகள் மரத்திலே அமர்ந்த உண்ணுகிறது.

 

இது பற்றி கூறுகையில் கடந்த 4 வருடமாக வறட்சியாக இருந்த நிலையில் நீர் நிலைகளும் வற்றிவிட்டது. தற்போது நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியிருந்தாலும் கொக்குகளுக்கு போதிய உணவு கிடைக்காததால் மாற்று வழிகளை தேடுகிறது. அதன் காரணமாகவே இப்படி கொக்குகள் பூச்சிளை உணவாக உண்பதற்காக அமர்ந்திருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

Leave a Reply

Right Menu Icon