கடைக்கு முன் நின்று அடாவடி செய்த திருநங்கைகள்..!
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே தனது துணிக்கடையை முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த திருநங்கைகளை அங்கிருந்து செல்லுமாறு கடைக்காரர் சுதர்சன் சொன்னதை கேட்காததால் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு திருநங்கைகள் கற்களை எடுத்து அவர் மீதும் கடையின் மீதும் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருநங்கைகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுதர்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






