தாலி கட்டிக் கொள்ளும் திருநங்கைகள்.. களைகட்டிய கூத்தாண்டவர் கோயில்..!
கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் வளையல், பூ, புது உடை அணிந்து தங்களை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து பூசாரி கையால் தாலி கட்டி கொண்டனர்.
அதன் பிறகு இரவு முழுவதும் இவர்கள் கும்மியடித்து ஆடி பாடி மகிழ்ந்து வருவார்கள். இதனை தொடர்ந்து நாளை காலை தேரோட்டம் நடைபெறும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





