மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது..!
சென்னிமலை அருகே 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆங்கில ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராமலிங்க புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம்.
இவர் சென்னிமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். அதே பள்ளியில் அவரது உறவினர் பெண் ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை சித்தப்பா முறை கொண்ட மாணிக்கம் கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.






