--- --:--:-- --

நிலத்திற்காக விபரீதம் முடிவு.. அதிகாரிகள் முன்பே விஷமருந்திய குடும்பத்தினர்..!

3

தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலத்தை நீதிமன்றம் உத்தரவின் படி அதிகாரிகள் அளவீடு செய்ய முயன்ற பொழுது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

 

ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அளவீடு செய்யப்படாமல் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் ஒரு பகுதியை பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பயன்படுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி நிலத்தை அளக்க ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சென்ற பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகேசன் மஞ்சு ஆகியோர் அதிகாரிகள் முன்னிலையில் விஷமருந்தியதாக கூறப்படுகிறது.மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

 

Right Menu Icon