மது போதையில் மின்சார கம்பியை தொட்ட இளைஞர் தூக்கி வீசப்பட்ட சோகம்..!
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மது போதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி மின்சார கம்பியை தொட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை பேருந்து நிலையத்தில் உள்ள காவல்துறையின் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இளைஞரை கீழே இறங்க அறிவுறுத்தியும் கேட்காத அவர் அங்கிருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக இளைஞரை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





