--- --:--:-- --

ஐடி ஊழியர்களை இறக்கி விட்டு திரும்பும் போது நடந்த சோகம்..!

10

சென்னை பள்ளிக்கரணை அருகே ஏரியில் கார் மூழ்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ரேடியோ சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நாராயணபுரம் ஏரியில் தலை குப்புற கவிழ்ந்தது.

 

இதனை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். இந்த விபத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கௌசர் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஐடி ஊழியர்களை இறக்கி விட்டு திரும்பும் பொழுது கார் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon