போக்குவரத்து காவலரின் மனைவி நிர்வாண கோலத்தில் மரணம்..!
தேனி அருகே போக்குவரத்து துணை ஆய்வாளரின் இரண்டாவது மனைவியை கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிறப்பு துணை ஆணையர் ஜெயக்குமார் என்பவர் தனது இரண்டாவது மனைவி அமுதாவுடன் கம்பம் மெட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அமுதா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்பொழுது அவர் படுக்கையறையில் நிர்வான கோலத்துடன் சரலமாக கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.






