திருப்பூரில் வணிக நிறுவன ஊழியர்கள் மீது திடீர் தாக்குதல்..!
திருப்பூரில் தனியார் பனியன் நிறுவன ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் பனியன் கம்பெனி நடத்தி வருபவர் கனகராஜ்.
இவர் பனியன் கம்பெனியில் வேலை செய்தவரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியில் வெளி நபர்கள் வந்து சென்றதாக தெரிகிறது. இதனால் தொழிலாளர் பகுதியில் வெளிநபர்கள் தங்கக்கூடாது என அவர்கள் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
\
இந்த சூழ்நிலையில் மது போதையில் இருந்த நான்கு நபர்கள் நிறுவன உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.






