இன்றைய தங்கம் விலை நிலவரம்.!
2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஆனால் பிப்ரவரி இறுதி தினமான இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்துள்ளது.
அந்த வகையில் நேற்று, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200க்கும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,010க்கும், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





