இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், தங்கத்தின் மீதான முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
அதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 37 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 576 ரூபாய்க்கும், சவரன் 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து 64 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 64 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.






