இன்றும் நாளையும், இடி மின்னலுடன் கூடிய மழை..!
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் தமிழகம், புதுவை, காரைக்காலில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் 83 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





