திருப்பூர் திருமுருகன்பூண்டியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை..தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு பாராட்டு..!
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி 23 வது வார்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் பெரிய அளவில் அடித்து வரப்பட்டு கால்வாய் நிரம்பி சென்றது. அப்போது வைத்தியர் வீட்டு முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் குப்பைகள் அடைத்தது. இதனால் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் வெளியேறத் தொடங்கியது.

இதனையடுத்து அப்பகுதி தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதையின் கணவரும், திமுக பிரமுகருமான ராமசந்திரன் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் உடனே சாக்கடையை சுத்தம் செய்யும் சாதனங்களைக் கொண்டு சாக்கடையில் இறங்கினார்.
பின்னர் சாக்கடை கால்வாயில் சிக்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் மற்றும் மழைநீர் தடங்கல் இன்றி வெளியேற வழி ஏற்படுத்தி கொடுத்தார். இதனை அப்பகுதி மக்கள் வாழ்த்தி பாராட்டினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




