திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் கன மழை நேரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க தற்காலிகமாக இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, பக்தர்கள் விரைவாக சாமி கும்பிடுவது ஆகிய விஷயங்களில் தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, பக்தர்கள் விரைவாக சாமி கும்பிடுவது ஆகிய விஷயங்களில் தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
இதற்கான உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி நடத்திய காணொளி ஆலோசனை கூட்டத்தில் தேவஸ்தானம் இணை நிர்வாக அதிகாரி வீரபத்திரம், மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, தொடர்ந்து கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய நிலையில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி கும்பிடுவதை தவிர்க்கும் வகையில் தற்காலிக ஏற்பாடாக திருப்பதியில் உள்ள கவுண்டர் களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதி மலை பாதைகளில் பாதுகாப்பு,கண்காணிப்பு ஆகியவற்றை தீவிர படுத்தவும் பாறை சரிவுகள் ஏற்பட்டால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்த வசதியாக ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கவும், திருப்பதி மலை முழுவதும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் மழைக்காலத்தில் பக்தர்கள் வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தேவையான இடங்களில் தேங்காய் நார் விரிப்புகளை பயன்படுத்தி பக்தர்கள் வழுக்கி விழாமல் தடுக்கவும் அப்போது உத்தரவிட்டுள்ளார்.





