--- --:--:-- --

ஆதார் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!

3

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட், இனி ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டண சேவை டிக்கெட் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவித்தார்.

 

தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய இனி வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவைகளை பயன்படுத்து இயலாது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி கூறினார்.

 

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்ல பக்தர்களுக்கான தரிசன டோக்கன்களை மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon