--- --:--:-- --

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

12

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலி மாசி திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். விழாவின் 8ம் நாளான இன்று மதியம் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை பட்டுடுத்தி மரிக்கொழுந்து, திருநீற்றுப்பச்சிலை போன்ற பச்சை வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் காக்கும் கடவுளான திருமாலின் அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எட்டு ரத வீதிகளையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் சுவாமி சண்முகரை பச்சை கோலத்தில் காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை வண்ண உடை அணிந்து பச்சை வண்ண மலர்கள் கொண்டு முருகனுக்கு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

 

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

Right Menu Icon