கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..!
கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்ப தேதி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு இந்த ஆண்டு முதல் இணையதள வழி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் விண்ணப்ப அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பது போதுமான விழிப்புணர்வு ஏற்படாததால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.






