8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர்
கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிவருகிறார்.
இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






