தென்தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.






