உணவு தர தாமதமானதால் உணவகத்தை சூறையாடிய மூன்று பேர்..!
தஞ்சையில் உணவு தர தாமதமானதால் உணவகத்தை மூன்று பேர் சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கரந்தை பகுதியில் உள்ள உணவகத்தில் ஒருவர் சிக்கன் ரைஸ் பெற்றுள்ளார். கடையில் இருந்தவர் சிறிது நேரம் காத்திருக்க சொன்னதால் வாக்குவாதம் முற்றி வெளியேறிய நபர் தனது நண்பர்கள் இருவருடன் மீண்டும் உணவகத்திற்கு வந்துள்ளார்.
மூவரும் அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கடையிலிருந்து எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை வெளியே தூக்கி வீசினார். அடிப்படையில் மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





