--- --:--:-- --

பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை இவர்தான்..!

13

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி அந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். அது ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கியது.

 

அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மனதில் எழுந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா தான் இனி புது முல்லையாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

 

சிப்பிக்குள் முத்து கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில், லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

Right Menu Icon