திருவாடானை அருகே டாஸ்மாக்கில் கூடுதல் விலை: மதுப்பிரியர்களுடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..¡
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள எஸ்.பி. பட்டினத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் (கடை எண்: 6870), மதுப் பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த மதுபானக் கடையில் 180 மி.லி மதுப் பாட்டில் ஒன்றுக்கு, அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மதுப்பிரியர்கள், கூடுதல் விலை குறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கூடுதலாகப் பெற்ற 10 ரூபாயில் 5 ரூபாயை மட்டும் ஊழியர்கள் மீண்டும் மதுப்பிரியர்களிடம் திருப்பி அளித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும், அந்த மதுபானக் கடையில் பாட்டில் சேகரிக்கும் பணியில் உள்ள ஒரு நபர், சட்டவிரோதமாக மது விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகப் மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, விதிமீறலில் ஈடுபடும் கடை மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.





