--- --:--:-- --

திருட சென்ற வீட்டுக்குள் ஏசி போட்டு தூங்கிய திருடன்..!

5

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் திருட வந்த வீட்டில் விருந்தாளியை போல் ஏசியை போட்டுக்கொண்டு குளுகுளுவென குட்டி தூக்கம் போட்ட திருடனை போலீசார் கைது செய்தனர்.

 

இந்திரா நகரில் மருத்துவ சுனில் பாண்டி என்பவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன் அறையில் ஏசி இருப்பதை கண்டு களைப்பில் ஏசியை போட்டுவிட்டு அயர்ந்து தூங்கியுள்ளான்.

 

அக்கம் பக்கத்தினர் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் கையில் போனுடன் திருடன் கண்ணையர்ந்து தூங்கிக் கொண்டிருந்த திருடனை கை விளங்கு போட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். மது போதையில் திருடன் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon